731விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான்
    கண்டாய்; வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்;
அரை அதனில் புள்ளி அதள் உடையான்
    கண்டாய்; அழல் ஆடி கண்டாய்; அழகன் கண்டாய்;
வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
        வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
             கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.