782 | விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே; மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே; கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே; காலங்கள், ஊழி, கடந்தார் தாமே; பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. |