தொடக்கம் |
|
|
1 | இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு, பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு, திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி, அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
2 | ஊன் மிசை உதிரக் குப்பை; ஒரு பொருள் இலாத மாயம்; மான் மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த மானுடப் பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்; ஆன் நல்வெள் ஏற்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
3 | அறுபதும் பத்தும், எட்டும், ஆறினோடு அஞ்சு-நான்கும், துறு பறித்தனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆகச் சொல்லார்; நறு மலர்ப்பூவும் நீரும் நாள் தொறும் வணங்குவார்க்கு(வ்) அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
4 | சொல்லிடில் எல்லை இல்லை, சுவை இலாப் பேதை வாழ்வு; நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன் அல்லேன்; மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
5 | நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லாக் குரம்பை வாய்க் குடி இருந்து குலத்தினால் வாழ மாட்டேன்; விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும் அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
6 | மணம் என மகிழ்வர், முன்னே, மக்கள் தாய் தந்தை சுற்றம், பிணம் எனச் சுடுவர், பேர்த்தே; பிறவியை வேண்டேன், நாயேன்; பணை இடைச் சோலை தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் அணை வினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
7 | தாழ்வு எனும் தன்மை விட்டு, தனத்தையே மனத்தில் வைத்து, வாழ்வதே கருதி, தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்; ஆழ் குழிப்பட்ட போது, அலக்கணில், ஒருவர்க்கு ஆவர்; யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
8 | உதிரம் நீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை(ம்)மேல் வருவது ஓர் மாயக் கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்; கரிய மால், அயனும், தேடிக் கழல் முடி காண மாட்டா அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
9 | பொய்த் தன்மைத்து ஆய மாயப்போர்வையை, மெய் என்று எண்ணும் வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி, நான் விரும்பகில்லேன்; முத்தினைத் தொழுது, நாளும் முடிகளால் வணங்குவார்க்கு(வ்) அத் தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே . |
|
உரை
|
|
|
|
|
10 | தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன், தடமுலைக்கண் அம் சொலார் பயிலும் ஆரூர் அப்பனை, ஊரன் அஞ்சி செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார், நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே . |
|
உரை
|
|
|
|