Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.79 திருப்பருப்பதம்
நட்டபாடை
1மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனை நீர்களைப் பருகி,
பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு,
தேமாம் பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பத மலையே.
உரை
   
3மன்னிப் புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க,
கன்னிக் கிளி வந்து(க்) கவைக் கோலிக் கதிர் கொய்ய,
“என்னைக் கிளி மதியாது” என எடுத்துக் கவண் ஒலிப்ப,
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீ பர்ப்பத மலையே.
உரை
   
5ஆனைக் குலம் இரிந்து ஓடி, தன் பிடி சூழலில்-திரிய,
தானப் பிடி செவி தாழ்த்திட, அதற்கு(ம்) மிக இரங்கி,
மானக் குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி,
தேனைப் பிழிந்து இனிது ஊட்டிடும் சீ பர்ப்பத மலையே.
உரை
   
7“அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன் இருந்தேன்;
எப்போதும் வந்து உண்டால், எமை எமர்கள் சுளியாரோ?
இப்போது உமக்கு இதுவே தொழில்” என்று ஓடி, அக் கிளியைச்
செப்பு ஏந்து இளமுலையாள் எறி சீ பர்ப்பத மலையே.
உரை
   
9ஏனத்திரள் கிளைக்க(வ்), எரி போல(ம்) மணி சிதற,
ஏனல்(ல்) அவை மலைச்சாரல் இற்று இரியும் கரடீயும்,
மானும், மரை இனமும், மயில் மற்றும், பல எல்லாம்,
தேன் உண் பொழில்-சோலை(ம்) மிகு சீ பர்ப்பத மலையே.
உரை
   
10நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன்
செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை
அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே.
உரை