Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
2எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும்,
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்;
பண் இசை ஆர் மொழியார் பலர் பாடப்
புண்ணியனார்; உறை பூவணம் ஈதோ! .
உரை
   
4சுரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி, தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்;
விரும்பேன், உன்னை அல்லால், ஒரு தெய்வம் என் மனத்தால்;
கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
உரை
   
8படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா!
உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்;
அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய;
கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .
உரை
   
10பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி,
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை,
தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே .
உரை