Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.17 திருநாவலூர்
நட்டராகம்
1கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய,
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்;
ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
2தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள், சபை முன்
வன்மைகள் பேசிட, வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்;
புன்மைகள் பேசவும், பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
3வேகம் கொண்டு ஓடிய வெள்விடை ஏறி ஓர் மெல்லியலை
ஆகம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்;
போகம் கொண்டார், கடல் கோடியில் மோடியை; பூண்பது ஆக
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
4அஞ்சும் கொண்டு ஆடுவர், ஆவினில்; சேவினை ஆட்சி கொண்டார்;
தஞ்சம் கொண்டார், அடிச்சண்டியை, தாம் என வைத்து உகந்தார்;
நெஞ்சம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டு
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
5உம்பரார் கோனைத் திண்தோள் முரித்தார்; உரித்தார், களிற்றை;
செம்பொன் ஆர் தீவண்ணர்; தூ வண்ண நீற்றர்; ஓர் ஆவணத்தால்,
எம்பிரானார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
6கோட்டம் கொண்டார், குட மூக்கிலும் கோவலும் கோத்திட்டையும்;
வேட்டம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்;
ஆட்டம் கொண்டார், தில்லைச் சிற்றம்பலத்தே; அருக்கனை முன்
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
7தாய் அவளாய், தந்தை ஆகி, சாதல் பிறத்தல் இன்றி,
போய் அகலாமைத் தன் பொன் அடிக்கு என்னைப் பொருந்த வைத்த
வேயவனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
8வாய் ஆடி, மாமறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து;
தீ ஆடியார்; சினக் கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய்,
வேய் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயாடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
9படம் ஆடு பாம்பு அணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும்,
வடம் ஆடு மால்விடை ஏற்றுக்கும், பாகனாய் வந்து ஒரு நாள்
இடம் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
உரை
   
7.97 திருநனிபள்ளி
பஞ்சமம்
1ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய
சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும்
நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
உரை
   
4ஓடு உடையன், கலனா; உடை கோவணவன்(ன்); உமை ஓர்-
பாடு உடையன்; பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன்; பயிலக்
காடு உடையன்(ன்), இடமா; மலை ஏழும், கருங்கடல் சூழ்
நாடு, உடை நம்பெருமான் நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
உரை
   
6மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்) உடனே,-
புல்கிய ஆரணன், எம் புனிதன், புரிநூல் விகிர்தன்,
மெல்கிய வில்-தொழிலான், விருப்பன், பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான், நண்ணும் ஊர் நன்பள்ளி அதே.
உரை
   
7.41 திருக்கச்சூர் ஆலக்கோயில்
கொல்லிக்கௌவாணம்
1முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே!
மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா!
கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே?
அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .
உரை
   
5மேலை விதியே! வினையின் பயனே! விரவார் புரம் மூன்று எரி செய்தாய்!
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்! கறைக் கண்டா!
மாலை மதியே! மலை மேல் மருந்தே! மறவேன், அடியேன்; வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .
உரை
   
9காதல் செய்து, களித்து, பிதற்றி, கடிமாமலர் இட்டு உனை ஏத்தி,
ஆதல் செய்யும் அடியார் இருக்க, ஐயம் கொள்வது அழகிதே!
ஓதக் கண்டேன்; உன்னை மறவேன்; உமையாள் கணவா! எனை ஆள்வாய்!
ஆதல் பழனக் கழனிக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .
உரை
   
10அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே .
உரை