தொடக்கம் |
|
|
2 | ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்; வாவியில் கயல் பாய, குளத்து இடை மடைதோறும் காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . |
|
உரை
|
|
|
|
|
4 | வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்; ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை, அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . |
|
உரை
|
|
|
|
|
6 | பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்! கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்! மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே, விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . |
|
உரை
|
|
|
|
|
8 | மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து இடை மால் தீர்ப்பாய்; சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக் கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே, விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . |
|
உரை
|
|
|
|
|
10 | வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை, இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்- உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே . |
|
உரை
|
|
|
|