தொடக்கம் |
|
|
7.42 திருவெஞ்சமாக்கூடல் கொல்லிக்கௌவாணம் |
1 | எறிக்கும் கதிர் வேய் உரி முத்த(ம்)மொடு, ஏலம்(ம்), இலவங்கம், தக்கோலம், இஞ்சி, செறிக்கும் புனலுள் பெய்து கொண்டு, மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல், குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா, வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே . |
|
உரை
|
|
|
|
|
2 | குளங்கள் பலவும் குழியும் நிறைய, குட மா மணி சந்தனமும்(ம்) அகிலும் துளங்கும் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை
மேல் வளம் கொள் மதில் மாளிகை, கோபுரமும், மணி மண்டபமும்(ம்), இவை மஞ்சு தன்னுள் விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே . |
|
உரை
|
|
|
|
|
3 | வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து
இறைஞ்ச, திரை ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை
மேல் நிரை ஆர் கமுகும், நெடுந் தாள்-தெங்கும், குறுந் தாள் பலவும், விரவிக் குளிரும் விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே . |
|
உரை
|
|
|
|
|
4 | பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்! படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று
ஒழியாய்! தண் ஆர் அகிலும், நல சாமரையும், அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் மண் ஆர் முழவும் குழலும் இயம்ப, மடவார் நடம் ஆடும்(ம்) மணி அரங்கில் விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே . |
|
உரை
|
|
|
|
|
5 | துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில்-துளங்கும் படியாய்! க(ள்)ளையே கமழும் மலர்க் கொன்றையினாய்! கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே! பி(ள்)ளை வெண் பிறையாய்! பிறங்கும் சடையாய்! பிறவாதவனே! பெறுதற்கு அரியாய்! வெ(ள்)ளை மால் விடையாய்! வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே. |
|
உரை
|
|
|
|
|
6 | தொழுவார்க்கு எளியாய்! துயர் தீர நின்றாய்! சுரும்பு ஆர் மலர்க் கொன்றை துன்றும்
சடையாய்! உழுவார்க்கு அரிய விடை ஏறி! ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய்! அழகா! முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்! விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே . |
|
உரை
|
|
|
|
|
7 | கடம் மா களியானை உரித்தவனே! கரிகாடு இடமா, அனல் வீசி நின்று நடம் ஆட வல்லாய்! நரை ஏறு உகந்தாய்! நல்லாய்! நறுங்கொன்றை நயந்தவனே! படம் ஆயிரம் ஆம் பருத் துத்திப் பைங்கண் பகுவாய் எயிற்றோடு அழலே உமிழும் விட வார் அரவா! வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே . |
|
உரை
|
|
|
|
|
8 | காடும் மலையும் நாடும் இடறி, கதிர் மா மணி சந்தனமும்(ம்) அகிலும் சேடன்(ன்) உறையும்(ம்) இடம் தான் விரும்பி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க் கரை மேல் பாடல் முழவும் குழலும்(ம்) இயம்ப, பணைத் தோளியர் பாதலொடு ஆடல் அறா, வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டிதியே . |
|
உரை
|
|
|
|
|
9 | கொங்கு ஆர் மலர்க் கொன்றை அம் தாரவனே! கொடு கொட்டி ஒர் வீணை உடையவனே! பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா! புனம் சூழ்ந்து அழகு ஆர் துங்கு ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை
மேல் வெங் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே . |
|
உரை
|
|
|
|
|
10 | “வஞ்சி நுண் இடையார் மயில் சாயல் அன்னார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே” என்று தான் விரும்பி, வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர் கோன்-வனப் பகை அப்பன், வன் தொண்டன்- சொன்ன செஞ்சொல்-தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே! . |
|
உரை
|
|
|
|