தொடக்கம் |
|
|
2 | பொய்யே செய்து புறம் புறமே திரிவேன் தன்னைப் போகாமே, மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே! பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா! பழையனூர் மேய ஐயா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
|
4 | மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு, மதி மயங்கி, அறிவே அழிந்தேன், ஐயா, நான்! மை ஆர் கண்டம் உடையானே! பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய அறிவே! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
|
6 | எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய்! எந்தை பெருமானே! கண் ஆய் உலகம் காக்கின்ற கருத்தா! திருத்தல் ஆகாதாய்! பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அண்ணா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
|
8 | பேழ்வாய் அரவின் அணையானும், பெரிய மலர் மேல் உறைவானும் தாழாது, உன் தன் சரண் பணிய, தழல் ஆய் நின்ற தத்துவனே! பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் தன்னை ஆள்வாய்! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே. |
|
உரை
|
|
|
|
|
10 | பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன், பழையனூர் மேய அத்தன், ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பு ஆகிச் சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்- பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே. |
|
உரை
|
|
|
|