தொடக்கம் |
|
|
7.53 திருக்கடவூர்மயானம் பழம்பஞ்சுரம் |
1 | மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ; திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும், பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. |
|
உரை
|
|
|
|
|
2 | விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்; வேதகீதத்தர்; கண் ஆர் நுதலர்; நகுதலையர்; காலகாலர்; கடவூரர்; எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர்; உமை ஓர் ஒருபாகம், பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. |
|
உரை
|
|
|
|
|
3 | காயும் புலியின் அதள் உடையர்; கண்டர்; எண்தோள் கடவூரர்; தாயும் தந்தை, பல் உயிர்க்கும், தாமே ஆன தலைவனார்; பாயும் விடை ஒன்று அது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. |
|
உரை
|
|
|
|
|
4 | நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்; பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப் பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. |
|
உரை
|
|
|
|
|
7.69 வட திருமுல்லைவாயில் தக்கேசி |
1 | “திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள்” என்று எண்ணி, ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்; முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
3 | விண் பணிந்து ஏத்தும் வேதியா! மாதர் வெருவிட, வேழம் அன்று உரித்தாய்! செண்பகச் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! தேவர் தம் அரசே! தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய்! சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப! நின் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
6 | மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக் குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்; செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன் பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
9 | மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே கட்டுவான் வந்த காலனை, மாளக் காலினால் ஆர் உயிர் செகுத்த சிட்டனே! செல்வத் திரு முல்லை வாயில் செல்வனே! செழுமறை பகர்ந்த பட்டனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! . |
|
உரை
|
|
|
|
|
11 | விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை, திரை தரு புனல் சூழ் திரு முல்லை வாயில் செல்வனை, நாவல் ஆரூரன் உரை தரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள், நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர், விண்ணவர்க்கு அரசே . |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next