|
7.55 திருப்புன்கூர் தக்கேசி |
1 | அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக, வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு
அடியேன், எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், “இவன் மற்று என் அடியான்” என விலக்கும் சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! . |
|
உரை
|