Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
5வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை,
பஞ்சதுட்டனை, “சாதுவே!” என்று பாடினும் கொடுப்பார் இலை;
பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
உரை
   
7நோயனை, “தடந்தோளனே!” என்று, நொய்ய மாந்தரை, “விழுமிய
தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்!” என்று, சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
உரை
   
11செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன்-வனப்பகை அப்பன், சடையன்தன்
சிறுவன், தொண்டன், ஊரன்-பாடிய பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
உரை