தொடக்கம் |
|
|
7.66 திருஆவடுதுறை தக்கேசி |
1 | மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக் கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன், “இறைவன், எம்பெருமான்” என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன் அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
2 | தெருண்ட வாய் இடை நூல் கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென இயற்ற, சுருண்ட செஞ்சடையாய்! அது தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு, அடியேன், புரண்டு வீழ்ந்து நின் பொன்மலர்ப் பாதம், “போற்றி போற்றி!” என்று அன்பொடு புலம்பி, அருண்டு, என் மேல்வினைக்கு அஞ்சி, வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
3 | திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய, புகழினால் அவன் கண் இடந்து இடலும், புரிந்து, சக்கரம் கொடுத்தல் கண்டு, அடியேன், திகழும் நின் திருப்பாதங்கள் பரவி, தேவதேவ! நின் திறம்பல் பிதற்றி, அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
7.29 திருக்குருகாவூர் வெள்ளடை நட்டராகம் |
1 | இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்! “பித்தனே” என்று உன்னைப் பேசுவார், பிறர் எல்லாம்; முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; . |
|
உரை
|
|
|
|
|
3 | பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்; ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே! காடு நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும் வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . |
|
உரை
|
|
|
|
|
5 | வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்; சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே! அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . |
|
உரை
|
|
|
|
|
7 | போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து, என்னை நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்; சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . |
|
உரை
|
|
|
|
|
9 | படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே; தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே! கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . |
|
உரை
|
|
|
|
|
10 | வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை, இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்- உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே . |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next