தொடக்கம் |
|
|
7.72 திருவலம்புரம் காந்தாரம் |
1 | எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்; பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல் எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும் மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
2 | புரம் அவை எரிதர வளைந்த வில்லினன், அவன்; மர உரி புலி அதள் அரைமிசை மருவினன்; அர உரி இரந்தவன், இரந்து உண விரும்பி நின்று; இரவு எரி ஆடி தன் இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
3 | நீறு அணி மேனியன், நெருப்பு உமிழ் அரவினன், கூறு அணி கொடுமழு ஏந்தி(ய) ஒர் கையினன், ஆறு அணி அவிர்சடை அழல் வளர் மழலை வெள்- ஏறு அணி அடிகள் தம் இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
4 | கொங்கு அணை சுரும்பு உண, நெருங்கிய குளிர் இளந் தெங்கொடு பனை பழம் படும் இடம்; தேவர்கள் தங்கிடும் இடம்; தடங்கடல்-திரை புடைதர எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
5 | கொடு மழு விரகினன், கொலை மலி சிலையினன், நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன், இடம்; படு மணி முத்தமும் பவளமும் மிகச் சுமந்து இடு மணல் அடை கரை இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
6 | கருங்கடக் களிற்று உரிக் கடவுளது இடம்; கயல் நெருங்கிய நெடும் பெ(ண்)ணை அடும்பொடு விரவிய மருங்கொடு, வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து இருங்கடல் அணைகரை இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
7 | நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர், வரி புரி பாட நின்று ஆடும் எம்மான், இடம்; புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து எரி எரி ஆடி தன் இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
8 | பாறு அணி முடைதலை கலன் என மருவிய, நீறு அணி, நிமிர்சடை முடியினன்; நிலவிய மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது, ஏறு உடை அடிகள் தம் இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
9 | சடசட விடு பெ(ண்)ணை பழம் படும் இட வகை; பட வடகத்தொடு பல கலந்து உலவிய கடை கடை பலி திரி கபாலிதன் இடம் அது; இடி கரை மணல் அடை இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
10 | குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர் கண்டவர், கண்டு அடி வீழ்ந்தவர், கனை கழல் தண்டு உடைத் தண்டிதன் இனம் உடை “அர” உடன் எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே. |
|
உரை
|
|
|
|
|
11 | வரும் கலமும் பல பேணுதல், கருங்கடல், இருங் குலப் பிறப்பர் தம் இடம் வலம்புரத்தினை, அருங் குலத்து அருந்தமிழ் ஊரன்-வன்தொண்டன்-சொல் பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே. |
|
உரை
|
|
|
|