தொடக்கம் |
|
|
2 | “தனியன்” என்று எள்கி அறியேன்; தம்மைப் பெரிதும் உகப்பன்; முனிபவர் தம்மை முனிவன்; முகம் பல பேசி மொழியேன்; கனிகள் பல உடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின் இனியன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
3 | சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்; கல்லில் வலிய மனத்தேன்; கற்ற பெரும் புலவாணர் அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறு அங்கம் ஓதும் எல்லை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
5 | நீதியில் ஒன்றும் வழுவேன்; நிட்கண்டகம் செய்து வாழ்வேன்; வேதியர் தம்மை வெகுளேன்; வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்; சோதியில் சோதி எம்மானை, சுண்ண வெண் நீறு அணிந்திட்ட ஆதி, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
7.34 திருப்புகலூர் கொல்லி |
1 | தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்; அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. |
|
உரை
|
|
|
|
|
11 | செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை நறவம் பூம்பொழில் நாவலூரன்-வனப்பகை அப்பன், சடையன்தன் சிறுவன், தொண்டன், ஊரன்-பாடிய பாடல் பத்து இவை வல்லவர் அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. |
|
உரை
|
|
|
|