தொடக்கம் |
|
|
7.75 திருஆனைக்கா காந்தாரம் |
1 | மறைகள் ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாத்- துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும், ஆய அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும், “இறைவன்” என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
2 | வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ, வஞ்சகர்கள் கூடி, தங்கள் மேல் அடராமை, “உண்!” என, உண்டு இருள் கண்டன்; அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும், “எங்கள் ஈசன்” என்பார்கள் எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | நீல வண்டு அறை கொன்றை, நேர் இழை மங்கை, ஒர் திங்கள், சால வாள் அரவங்கள், தங்கிய செஞ்சடை எந்தை; ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
4 | தந்தை தாய், உலகுக்கு; ஓர் தத்துவன்; மெய்த் தவத்தோர்க்கு; பந்தம் ஆயின பெருமான்; பரிசு உடையவர் திரு அடிகள்; அம் தண் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் “எந்தை” என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
5 | கணை செந்தீ, அரவம் நாண், கல் வளையும் சிலை, ஆகத் துணை செய் மும் மதில் மூன்றும் சுட்டவனே, உலகு உய்ய; அணையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் இணை கொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
6 | விண்ணின் மா மதி சூடி; விலை இலி கலன் அணி விமலன்; பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன்; பசு உகந்து ஏறி; அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும் எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
7 | தாரம் ஆகிய பொன்னித் தண்துறையும் ஆடி விழுத்தும் நீரில் நின்று, அடி போற்றி, “நின்மலா, கொள்!” என ஆங்கே ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
8 | உரவம் உள்ளது ஒர் உழையின் உரி, புலி அதள், உடையானை; விரை கொள் கொன்றையினானை, விரி சடை மேல், பிறையானை; அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும் இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
9 | வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து; கலங்கக் காலனைக் காலால், காமனைக் கண், சிவப்பானை; அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை; நாளும் இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|
|
10 | ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின் நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார், போய், ஏழுமா பிறப்பு அற்று(வ்) எம்மையும் ஆள் உடையாரே. |
|
உரை
|
|
|
|