தொடக்கம் |
|
|
2 | பறியே சுமந்து உழல்வீர்; பறி நரி கீறுவது அறியீர்; குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே? அறிவானிலும் அறிவான்-நல நறுநீரொடு, சோறு, கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
4 | உழக்கே உண்டு, படைத்து ஈட்டி வைத்து, இழப்பார்களும், சிலர்கள்; “வழக்கே?” எனில், “பிழைக்கேம்” என்பர், மதி மாந்திய மாந்தர்; சழக்கே பறி நிறைப்பாரொடு தவம் ஆவது செயன்மின்! கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
6 | தளி சாலைகள் தவம் ஆவது, தம்மைப் பெறில் அன்றே? குளியீர், உளம்! குருக்கேத்திரம் கோதாவிரி, குமரி, தெளியீர் உளம்! சீ பர்ப்பதம்; தெற்கு(வ்) வடக்கு ஆக கிளி வாழை ஒண்கனி கீறி உண் கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
8 | முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது வேய்களை இறுத்து, துளைக்கைக் களிற்று இனம் ஆய் நின்று சுனை நீர்களைத் தூவி, வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக் கிளைக்க(ம்) மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே! |
|
உரை
|
|
|
|
|
10 | நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன், யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன், தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே. |
|
உரை
|
|
|
|