தொடக்கம் |
|
|
2 | நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும் துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து, தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு, என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே? |
|
உரை
|
|
|
|
|
4 | நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக் கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய, செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு, எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே? |
|
உரை
|
|
|
|
|
6 | சூழ் ஒளி, நீர், நிலம், தீ, தாழ் வளி, ஆகாசம், வான் உயர் வெங்கதிரோன், வண்தமிழ் வல்லவர்கள் ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஓசையை;-ஆரூர் புக்கு- ஏழ் உலகு ஆளியை; நான் என்றுகொல் எய்துவதே; |
|
உரை
|
|
|
|
|
8 | ஆறு அணி நீள் முடிமேல் ஆடு அரவம் சூடிப் பாறு அணி வெண்தலையில் பிச்சை கொள் நச்சு அரவன்,- சேறு அணி தண்கழனித் தென்திரு ஆரூர் புக்கு- ஏறு அணி எம் இறையை, என்றுகொல் எய்துவதே? |
|
உரை
|
|
|
|
|
10 | மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன் பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார் பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே. |
|
உரை
|
|
|
|