தொடக்கம் |
|
|
7.89 திருவெண்பாக்கம் சீகாமரம் |
1 | “பிழை உளன பொறுத்திடுவர்” என்று அடியேன் பிழைத்தக்கால் பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்; “குழை விரவு வடி காதா! கோயில் உளாயே!” என்ன, உழை உடையான் உள் இருந்து, “உளோம்; போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
2 | இடை அறியேன்; தலை அறியேன்; “எம்பெருமான், சரணம்!” என்பேன்; “நடை உடையன், நம் அடியான்; என்று அவற்றைப் பாராதே, விடை உடையான், விடநாகன், வெண்நீற்றன், புலியின்தோல்- உடை உடையான், எனை உடையான், “உளோம்; போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
3 | செய் வினை ஒன்று அறியாதேன்; “திருவடியே சரண்” என்று பொய் அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ? “பை அரவா! இங்கு இருந்தாயோ?” என்ன, பரிந்து என்னை உய்ய அருள் செய்ய வல்லான், “உளோம், போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
4 | கம்பு அமரும் கரி உரியன்; கறைமிடற்றன்; காபாலி; செம்பவளத்திரு உருவன்; சேயிழையோடு உடன் ஆகி, “நம்பி இங்கே இருந்தீரே!” என்று நான் கேட்டலுமே, உம்பர் தனித்துணை எனக்கு, “உளோம்; போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
5 | பொன் இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல் பொலிந்து இலங்க, மின் இலங்கு நுண் இடையாள் பாகமா, எருது ஏறி, துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த, அடியேனும் உன்ன தம் ஆய்க் கேட்டலுமே, “உளோம் போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
6 | கண் நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர், தெண்நிலவு, செஞ்சடைமேல் தீ மலர்ந்த கொன்றையினான்; “கண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ?” என்ன, ஒண்நுதலி பெருமானார், “உளோம்; போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
7 | பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்யத் தார் நிலவு நறுங்கொன்றைச் சடையனார்; “தாங்க(அ)ரிய கார் நிலவு மணிமிடற்றீர்! இங்கு இருந்தீரே?” என்ன, ஊர் அரவம் அரைக்கு அசைத்தான், “உளோம்; போகீர்; என்றானே! |
|
உரை
|
|
|
|
|
8 | வார் இடம் கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பாரிடங்கள் பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி, கார் இடம் கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி- யூர் இடம் கொண்டு இருந்த பிரான், “உளோம்; போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
9 | பொன் நவிலும் கொன்றையினாய்! “போய் மகிழ்க்கீழ் இரு!” என்று சொன்ன எனைக் காணாமே, “சூளுறவு மகிழ்க்கீழே” என்ன வல்ல பெருமானே! “இங்கு இருந்தாயோ?” என்ன, ஒன்னலரைக் கண்டால் போல், “உளோம்; போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
10 | “மான் திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள் எல்லாம் தோன்ற அருள் செய்து அளித்தாய்” என்று உரைக்க, “உலகம் எலாம் ஈன்றவனே! வெண்கோயில் இங்கு இருந்தாயோ?” என்ன, ஊன்றுவது ஓர் கோல் அருளி, “உளோம்; போகீர்!” என்றானே! |
|
உரை
|
|
|
|
|
11 | ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம் கொண்ட கார் ஆரும் மிடற்றானைக் காதலித்திட்டு, அன்பினொடும் சீர் ஆரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா, வல்வினைதானே. |
|
உரை
|
|
|
|