Try error :java.sql.SQLException: Closed Statement
 
7.94 திருச் சோற்றுத்துறை
கௌசிகம்
1அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்-
கழை நீர் முத்தும் ககைக்குவையும்
சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.
உரை
   
2பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்-
இண்டை கொண்டு அன்பு இடை அறாத
தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.
உரை
   
3கோல அரவும், கொக்கின் இறகும்,
மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்-
ஆலும் மயிலும், ஆடல் அளியும்,
சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.
உரை
   
4பளிக்குத்தாரை பவளவெற்பில்
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்-
அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும்
துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே.
உரை
   
5உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு
வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்-
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னி-சோற்றுத்துறையே.
உரை
   
6ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட
பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்-
சீதப்புனல் உண்டு எரியைக் காலும்
சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே.
உரை
   
7இறந்தார் என்பும், எருக்கும், சூடிப்
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்-
சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன
துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே.
உரை
   
8காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த
ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்-
தேமென்குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே.
உரை
   
7.37 திருஆரூர்
கொல்லி
1குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரைப்
பருகும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், நினைந்து
உருகும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
2பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்!
அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை
மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும்,
உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
4சக்கிரவாளத்து இளம் பேடைகாள்! சேவல்காள்!
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு,
வக்கிரம் இல்லாமையும், வளைகள் நில்லாமையும்,
உக்கிரம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .
உரை
   
7.52 திருஆலங்காடு
பழம்பஞ்சுரம்
1முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா!
சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே!
பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய
அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
உரை
   
5வேல் அங்கு ஆடு தடங்கண்ணார் வளையுள் பட்டு, உன் நெறி மறந்து,
மால் அங்கு ஆடி, மறந்தொழிந்தேன்; மணியே! முத்தே! மரகதமே!
பால் அங்கு ஆடீ! நெய் ஆடீ! படர் புன்சடையாய்! பழையனூர்
ஆலங்காடா! உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே.
உரை
   
9எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ் படிகால் எமை ஆண்ட
பெம்மான்! ஈமப் புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே!
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
உரை