7.96 திருஆரூர்ப் பரவையுள்மண்டளி
பஞ்சமம்
1தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா? கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும்,
நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
“ஆவா!” என் பரவையுள் மண்டளி அம்மானே!
உரை
   
2பொன்னானே, புலவர்க்கு! நின் புகழ் போற்றல் ஆம்-
தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி!
மின்னானே! செக்கர்வானத்து இள ஞாயிறு
அன்னானே! பரவையுள் மண்டளி அம்மானே!
உரை
   
3நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார்
போம் ஆறு என்? புண்ணியா! புண்ணியம் ஆனானே!
பேய் மாறாப் பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு
ஆம் ஆறு என்?-பரவையுள் மண்டளி அம்மானே!
உரை
   
4நோக்குவேன், உன்னையே; நல்லன நோக்காமைக்
காக்கின்றாய்; கண்டு கொண்டார் ஐவர் காக்கினும்,
வாக்கு என்னும் மாலைகொண்டு உன்னை என் மனத்து
ஆர்க்கின்றேன் பரவையுள் மண்டளி அம்மானே!
உரை
   
5பஞ்சு ஏறும் மெல் அடியாளை ஓர்பாகம் ஆய்,
நஞ்சு ஏரும் நல் மணிகண்டம் உடையானே!
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை,
“அஞ்சேல்!” என்பரவையுள் மண்டளி அம்மானே
உரை
   
6அம்மானே! ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன்
தம்மானே! தண்தமிழ்நூல் புலவாணர்க்கு ஓர்
அம்மானே! பரவையுள்மண்டளி அம்மானே!
உரை
   
7விண்டானே! மேலையார் மேலையார் மேல் ஆய
எண்தானே! எழுத்தொடு சொல்பொருள் எல்லாம் முன்
கண்டானே! கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே!-
அண்டானே! பரவையுள் மண்டளி அம்மானே!
உரை
   
8காற்றானே! கார்முகில் போல்வது ஒர் கண்டத்து எம்
கூற்றானே! கோல்வளையாளை ஓர்பாகம் ஆம்
நீற்றானே! நீள்சடைமேல் நிறை உள்ளது ஓர்
ஆற்றானே! பரவையுள் மண்டளி அம்மானே!
உரை
   
9செடியேன், நான்; செய்வினை நல்லன செய்யாத
கடியேன், நான் கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன், நான்; கூறும் ஆறு உன் பணி கூறாத
அடியேன், நான்பரவையுள் மண்டளி அம்மானே!
உரை
   
10கரந்தையும், வன்னியும், மத்தமும், கூவிளம்,
பரந்த சீர்ப் பரவையுள் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.
உரை