தொடக்கம் |
|
|
7.99 திருநாகேச்சுரம் பஞ்சமம் |
1 | பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ் கணிக்க நிறை அணி நெஞ்சு அனுங்க(ந்), நீலமால்விடம் உண்டது என்னே? குறை அணி குல்லை, முல்லை, அளைந்து(க்), குளிர் மாதவி மேல் சிறை அணி வண்டுகள் சேர்-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
2 | அருந்தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி, ஓர் ஆல் அதன் கீழ் இருந்து, அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னைகொல் ஆம்!- குருந்து அயலே குரவம்(ம்) அரவின்(ன்) எயிறு ஏற்று அரும்ப, செருந்தி செம்பொன் மலரும்-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
3 | பாலனது ஆர் உயிர்மேல் பரியாது கைத்து எழுந்த காலனை வீடுவித்து, கருத்து ஆக்கியது என்னைகொல் ஆம்?- கோல மலர்க்குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில், சேலொடு வாளைகள் பாய்-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
4 | குன்ற-மலைக்கு மரீ-கொடி ஏர் இடையாள்-வெருவ, வென்றி மதகரியின்(ன்) உரி போர்த்ததும் என்னைகொல் ஆம்?- முன்றில் இளங் கமுகின் முது பாளை மது அளைந்து, தென்றல் புகுந்து உலவும்-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
5 | அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து, ஒரு நால்மறை நூல் உரை பெருக(வ்) உரைத்து, அன்று உகந்து(வ்), அருள்செய்தது என்னே?- வரை தரு மா மணியும், வரைச் சந்து, அகிலோடும், உந்தித் திரை பொரு தண்பழன-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
6 | தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின் நின்று எழுந்த சிங்கமும் நீள் புலியும் செழு மால்கரியோடு அலறப் பொங்கிய போர் புரிந்து(ப்), பிளந்து, ஈர் உரி போர்த்தது என்னே?- செங்கயல் பாய் கழனி-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
7 | நின்ற இம் மா தவத்தை ஒழிப்பான் சென்று, அணைந்து, மிகப் பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?- பங்கய மா மலர்மேல் மது உண்டு, வண் தேன் முரல, செங்கயல் பாய் வயல் சூழ்-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
8 | வரி அர நாண் அது(வ்) ஆக, மாமேரு வில் அது(வ்) ஆக, அரியன முப்புரங்கள்(ள்) அவை ஆர் அழல் மூட்டல் என்னே?- விரிதரு மல்லிகையும், மலர்ச் சண்பகமும்(ம்), அளைந்து திரிதரு வண்டு பண்செய்-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
9 | அங்கு இயல் யோகு தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிகப் பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?- பங்கய மா மலர்மேல் மது உண்டு, பண் வண்டு அறைய, செங்கயல் நின்று உகளும்-திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
10 | குண்டரை, கூறை இன்றித் திரியும் சமண்சாக்கியப்பேய்- மிண்டரை, கண்ட தன்மை விரவு ஆகியது என்னைகொலோ? தொண்டு இரைத்து(வ்), வணங்கி, தொழில் பூண்டு, அடியார் பரவும் தெண்திரைத் தண்வயல் சூழ் திரு நாகேச்சுரத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
11 | கொங்கு அணை வண்டு அரற்ற, குயிலும் மயிலும் பயிலும் தெங்கு அணை பூம்பொழில் சூழ் திரு நாகேச்சுரத்து அரனை, வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன், சொன்ன பங்கம் இல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே. |
|
உரை
|
|
|
|