2. கீர்த்தித் திரு அகவல்


குற்றா லத்துக் குறியா யிருந்தும்;

பதப்பொருள் : குற்றாலத்து - திருக்குற்றாலத்தில், குறியாய் இருந்தும் - அடையாளமாய் இருந்தும்.

விளக்கம் : திருக்குற்றாலத்தில் திருமால் வடிவத்தையே அகத்திய முனிவர் சிவலிங்க உருவமாகச் செய்தனர் என்பதைக் கந்தபுராணத்துட் காண்க. திருக்குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.