பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
139

10

10. அளவியை யார்க்கு மறிவரி
      யோன்றில்லை யம்பலம்போல்
   வளவிய வான்கொங்கை வாட்டடங்
      கண்ணுதல் மாமதியின்
   பிளவியல் மின்னிடை பேரமை
      தோளிது பெற்றியென்றாற்
   கிளவியை யென்னோ வினிக்கிள்ளை
      யார்வாயிற் கேட்கின்றதே.