பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
255

100

100. தெங்கம் பழங்கமு கின்குலை
        சாடிக் கதலிசெற்றுக்
    கொங்கம் பழனத் தொளிர்குளிர்
        நாட்டினை நீயுமைகூர்
    பங்கம் பலவன் பரங்குன்றிற்
        குன்றன்ன மாபதைப்பச்
    சிங்கந் திரிதரு சீறூர்ச்
        சிறுமியெந் தேமொழியே.