101. சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை மலையொன்று மாமுகத் தெம்மையர் எய்கணை மண்குளிக்குங் கலையொன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன் கொலையொன்று திண்ணிய வாறையர் கையிற் கொடுஞ்சிலையே.