பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
259

104

104. உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
        அம்பலத் தும்மொளியே
   பெருகு தலைச்சென்று நின்றோன்
        பெருந்துறைப் பிள்ளைகள்ளார்

   முருகு தலைச்சென்ற கூழை
        முடியாமுலைபொடியா
   ஒருகு தலைச்சின் மழலைக்கென்
        னோவைய வோதுவதே.