பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
260

105

105. பண்டா லியலு மிலைவளர்
        பாலகன் பார்கிழித்துத்
    தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
        லோன்தொல்லைத் தில்லையின்வாய்

    வண்டா லியலும் வளர்பூந்
        துறைவ மறைக்கினென்னைக்
    கண்டா லியலுங் கடனில்லை
        கொல்லோ கருதியதே.