106. மத்தகஞ் சேர்தனி நோக்கினன் வாக்கிறந் தூறமுதே ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின் றோன்தில்லை யொத்திலங்கும் முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந் தோளி முகமதியின் வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன் றோஎன் விழுத்துணையே.