107. விண்ணிறந் தார்நிலம் விண்டவ ரென்றுமிக் காரிருவர் கண்ணிறந் தார்தில்லை யம்பலத் தார்கழுக் குன்றினின்று தண்ணறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார் எண்ணிறந் தாரவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே.