பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
265

109

109. ஈசற் கியான்வைத்த வன்பி
        னகன்றவன் வாங்கியவென்
    பாசத்திற் காரென் றவன்தில்லை
        யின்னொளி போன்றவன்தோள்

    பூசத் திருநீ றெனவெளுத்
        தாங்கவன் பூங்கழல்யாம்
    பேசத் திருவார்த்தை யிற்பெரு
        நீளம் பெருங்கண்களே.