பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
267

110

110. தோலாக் கரிவென்ற தற்குந்
        துவள்விற்கு மில்லின்தொன்மைக்
    கேலாப் பரிசுள வேயன்றி
        யேலேம் இருஞ்சிலம்ப

 மாலார்க் கரிய மலர்க்கழ
        லம்பல வன்மலையிற்
    கோலாப் பிரசமன் னாட்கைய
        நீதந்த கொய்தழையே.