111. கழைகாண் டலுஞ்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில் தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பனின் றம்பலத்தான் உழைகாண் டலும்நினைப் பாகுமென் நோக்கிமன் நோக்கங்கண்டால் இழைகாண் பணைமுலை யாயறி யேன் சொல்லும் ஈடவற்கே.