113. ஏறும் பழிதழை யேற்பின்மற் றேலா விடின்மடன்மா ஏறு மவனிட பங்கொடி யேற்றிவந் தம்பலத்துள் ஏறு மரன்மன்னும் ஈங்கோய் மலைநம் மிரும்புனம் காய்ந் தேறு மலைதொலைத் தாற்கென்னை யாஞ்செய்வ தேந்திழையே.