114. தெவ்வரை மெய்யெரி காய்சிலை யாண்டென்னை யாண்டுகொண்ட செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை அவ்வரை மேலன்றி யில்லைகண் டாயுள்ள வாறருளான் இவ்வரை மேற்சிலம் பன்னெளி திற்றந்த ஈர்ந்தழையே.