116. வானுழை வாளம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன் தானுழை யாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகைபோல் தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கால்மதியோன் கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே.