118. தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச் சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார் வினைவளம் நீறெழ நீறணி யம்பல வன்றன்வெற்பிற் புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே.