பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
141

12

12. சிந்தா மணிதெண் கடலமிர்
        தந்தில்லை யானருளால்
   வந்தா லிகழப் படுமே
        மடமான் விழிமயிலே
   அந்தா மரையன்ன மேநின்னை
        யானகன் றாற்றுவனோ
   சிந்தா குலமுற்றென் னோவென்னை
        வாட்டந் திருத்துவதே.