121. தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோனரு ளென்னமுன்னி முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏரளப்பாள் ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப் பித்தீர் பணைமுலை காளென்னுக் கின்னும் பெருக்கின்றதே.