பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
283

122

122. அளிநீ டளகத்தின் அட்டிய
        தாதும் அணியணியும்
    ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
        மாலையுந் தண்நறவுண்
    களிநீ யெனச்செய் தவன்கடற்
        றில்லையன் னாய்கலங்கல்
    தெளிநீ யனையபொன் னேபன்னு
        கோலந் திருநுதலே.