125. பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த மின்னனை யானருள்மேவலர் போன்மெல் விரல்வருந்த மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள் இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற் கேய்வனவே.