127. தழங்கு மருவியெஞ் சீறூர் பெரும இதுமதுவுங் கிழங்கு மருந்தி இருந்தெம்மொ டின்று கிளர்ந்துகுன்றர் முழங்குங் குரவை இரவிற்கண் டேகுக முத்தன்முத்தி வழங்கும் பிரானெரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே.