128. தள்ளி மணிசந்த முந்தித் தறுகட் கரிமருப்புத் தெள்ளி நறவந் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும் வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே.