பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
142

13

13. கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
        பங்கன் குறுகலரூர்
   தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
        சிற்றம் பலமனையாள்
   நீங்கிற் புணர்வரி தென்றோ
        நெடிதிங்ங னேயிருந்தால்
   ஆங்கிற் பழியா மெனவோ
        அறியே னயர்கின்றதே.