பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
293

130

130. வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
        கார்வரை மீன்பரப்பிச்
    சேய்தந்த வானக மானுஞ்
        சிலம்பதன் சேவடிக்கே
    ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
        அம்பல வன்மலையில்
    தாய்தந்தை கானவ ரேனலெங்
        காவலித் தாழ்வரையே.