132. பனித்துண்டஞ் சூடும் படர்சடை அம்பல வன்னுலகந் தனித்துண்டவன்தொழுந் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற் றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக் கென்றஞ்சு மெம்மனையே.