134. சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம் பலவற் றொழாதுதொல்சீர் கற்று மறியல ரிற்சிலம் பாவிடை நைவதுகண் டெற்றுந் திரையின் னமிர்தை யினித்தம ரிற்செறிப்பார் மற்றுஞ் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே.