பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
299

135

135. வழியும் அதுவன்னை யென்னின்
        மகிழும்வந் தெந்தையும்நின்
    மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
        னேவய மம்பலத்துக்
    குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
        றாலமுற் றும்மறியக்
    கெழியும்ம வேபணைத் தோள்பல
        வென்னோ கிளக்கின்றதே.