136. படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண் இடையார் மெலிவுங்கண் டண்டர்க ளீர்முல்லை வேலியெம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர் உடையார் கடவி வருவது போலு முருவினதே.