பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
302

137

137. உருப்பனை அன்னகைக் குன்றொன்
        றுரித்துர வூரெரித்த
    நெருப்பனை யம்பலத் தாதியை
        யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
        னாளைப் புனைதல்செப்பிப்
    பொருப்பனை முன்னின்றென் னோவினை
        யேன்யான் புகல்வதுவே.